Wednesday 25 October 2017

ரோபோக்களின் உலகம்-2

ரோபோக்களின் வரலாறு பண்டைய காலங்களுக்குப் பின் ஏன் செல்கிறது?

ரோபோக்கள் ஒரு நவீன நிகழ்வு என்பது  உண்மை, ஆனால் அவை பண்டைய காலத்தில் இருந்தே, சில வடிவத்தில் இருந்தன. புராணங்களில் ரோபோக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கிரேக்க தேவன் ஹெஃப்ஃபெஸ்ட் ரோபோவை போல ஒரு மாடலைப் தனது வேலையில் அவருக்கு உதவியாகப் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பண்டைய சீனா, கிரீஸ், எகிப்து ஆகியவற்றில் தானியங்கு இயந்திரங்கள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள், அவைகளில் சில விலங்குகள் அல்லது மனிதர்களைப் போலவே இருந்தன. இதில், எந்தவொரு மின்னணு பொருட்களும் இதில் சம்பந்தப்படவில்லை.மெகானிகல் கோட்பாடுகள் மற்றுமே அதில் பயன்படுத்தப்பட்டன.
நவீன ரோபோக்களின் வரலாறு எப்போது ஆரம்பித்தது?
நவீன ரோபோக்களின் வரலாறானது சிக்கலான இயந்தரவியல் மற்றும் மின்னியல் ஆரம்பித்த போதே அதுவும் ஆரம்பமானது.முதலில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் மனித உதவியின்றி சுயமாக உற்பத்தி துறையில் பயன்படுத்தப்பட்டது.
1954 ஆம் ஆண்டில், ஜார்ஜ் டெவெல் அல்டிமேட் வடிவமைத்த ஒரு ரோபோ  கை கருவியாகும், இது அமெரிக்காவில் ஒரு ஆட்டோமொபைல் ஆலைக்கு வார்ப்புகளை அனுப்ப உதவியது. இது 1961 இல் வேலையைத் தொடங்கியது.
1960 களில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு தொழில்துறை ரோபோக்களின் வருகையைப் பார்த்தது. ரோபோடிக்ஸ் ஒரு வளர்ந்துவரும் விஞ்ஞானமாக மாறியது, பெரிய முதலீடுகள் செய்யப்பட்டன, மற்றும் ரோபாட்டிக்ஸ் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வேகமாக பரவின.
மனித ரோபோக்கள் என்பது என்ன?

லியோனார்டோ டா வின்சி 1495 ஆம் ஆண்டில் முதல் மனித உருமாதிரி ரோபோவை வடிவமைத்து உருவாக்கினார். மனித உருமாற்ற ரோபோகள் மனிதர்களைப் போலவே உருவாக்கப்பட்டன. டா வின்சியின் ரோபோ ஒரு கவச குதிரையாக இருந்தது, அது உட்கார்ந்து, அதன் கைகளை அசைத்து, அதன் தாடை திறந்து மூடி அதன் தலையை நகர்த்தியது.
18 ஆம் நூற்றாண்டில், பெரிய இயந்திர பொம்மைகளால் குறுகிய வாசிப்புகளை எழுதவும், இசைக்கருவிகள் வாசித்தல் மற்றும் பிற எளிய, வாழ்க்கை சார்ந்த செயல்களை செய்யவும் முடிந்தது.
முதன் முதாலாய் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட ரோபோ Eric ஆகும். இது 1928-ல் W.H.Richards என்பவரால் உருவாக்கப்பட்டு லண்டனில் ஒரு பொறியல் கண்காட்சியில் வைக்கப்பட்டது.
1973-ல் மனிதனைப் போன்ற ரோபோ டோக்கியாவில் உள்ள Waseda பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்டது. Wabot-1 என்கின்ற ரோபோ மனிதனைப் போன்றே நடந்தது, ஜபனீஸ் மொழியில் பேசியது..
------தொடரும்.
-----முத்து கார்த்திகேயன்,மதுரை

Monday 16 October 2017

ரோபோட்களின் உலகம்-1


 

ரோபோட் என்பது என்ன?


ரோபோட் என்பது மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இயந்திரம் ஆகும்.இது மனிதர்களால் செய்யும் அல்லது செய்ய முடியாத வேலைகளை செய்ய பயன் படுகின்றது.இது தானியங்கி முறை அல்லது ரிமோட் கன்ட்ரோல் முறையிலோ இயங்கும்.
இவை தொடர்ச்சியாக ஒரே வேலையைச் செய்யும் . அல்லது சில வேலைகள் மனிதர்களால் செய்ய முடியாத அபாயமான வேலைகளை செய்யவோ  பயன் படுகின்றது.
ரோபோட்கள் தோற்றத்தில் மணிதர்களை போன்றோ அல்லது விலங்குகளை போன்றோ இருக்கும்.ஆனால் அவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.தொழிற்சாலைகளில் பயன்படும் ரோபோக்கள் மனிதர்களைப் போன்று இருப்பதில்லை. அளவில் மிகவும் சிறியாதாகக் கூட இருக்கும். ஆனால் அவை மனிதர்களால் முன்பு செய்யப் பட்ட வேலைகளை செய்கின்றன.

ரோபோடிக்ஸ் என்பதன் அர்த்தம் என்ன?


ரோபோடிக்ஸ் என்பது  ரோபோட்களை பற்றிய அறிவியல் ஆகும்.இது ரோபோட்களின் வடிவம்,உருவாக்கம்,செயல்பாடு மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய படிப்பு ஆகும்.
ரோபோடிக்ஸ் மிகவும் விரும்பி படிக்கக் கூடிய மற்றும் விரைவாக வளர்ந்து வரும் துறைஆகும்.இவை தொழிற்சாலைகள், ஆய்வகக் கூடகங்கள் ஏன் வீட்டில் கூட பயன்படுகின்றன. இவை மனிதர்களால் செய்வதற்கு அபாயமான அதாவது ஒரு பாமினை (bomb)செயலிழக்கச் செய்வது, சுரங்கங்களில் பணிபுரிவது போன்ற வேலைகளை செய்ய பயன்படுகின்றது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் மனிதர்களை விட சுலபமாக மற்றும்  குறைந்த விலையில் பயன்படுகின்றது.இப்போது ஒரு வாய்வு கிடங்குகளிலோ ,எரிமலையிலோ அல்லது செய்வாய் கிரகத்திற்க்கு அனுப்புவதற்கோ மனிதர்களை விட ரோபோட்களை பயன்வடித்துவது லாபககரணாதாகும்.

ரோபோட் என்கின்ற பெயர்  எங்கிருந்து வந்தது?


‘இது ஒரு Czech மொழி வார்த்தையாகும். இதன் அர்த்தம் ‘அடிமை’.1921ம் ஆண்டு பிரபல Czech எழுத்தாளர் karel capek என்பவர் ரோபோட்களை பற்றிய ஒரு நாடகம் எழுதினார்.
இது lattest பயாலஜி ,கெமிஸ்ட்ரி, பிஸியாலஜி தொழிற் நுட்பங்களை உபயோகப் படுத்தும் ஒரு  கம்பனியை பற்றிய கதை ஆகும்.இந்த நாடகத்தின் முடிவு காட்சிகளில் ரோபோட்கள் மனிதர்களுக்கு எதிராக புரட்சி செய்கின்றன.
கடைசியில் இரு ரோபோகள் மனிதர்களின் எல்லாப் பண்புகளும் கிடைக்கப் பெற்று காதல் புரிகின்றன.
இந்த நாடகம் பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப் பட்டது. அன்றிலிலுந்து சைன்ஸ் ஃபிக்ஸன் எழுதும் எழுத்தாளர்களுக்கு ரோபோட்கள் பற்றி விரும்பி எழுத ஆரம்பித்தார்கள்.முதல் டிஜிட்டல் மற்றும் ப்ரோக்ராமபில்  ரோபோட் ஆனது George Devol என்பரால் கண்டுபிடிக்கப் பட்டது.

ஆட்டோமேசன்,ரோபோட்ஸ் என்ன வித்தியாசம்?


இரண்டாயிரம் ஆன்டுகளுக்கு முன் மனிதர்கள் அவர்கள் போன்றே தோற்றமளிக்கும் மற்றும் நகரக் கூடிய இயந்திங்களை கண்டு பிடித்தார்கள்.அந்த மாதிரியான ஒரு இயந்திரம் ஆட்டோமேசன் எனப்படுகின்றது.
இவை தொடர்ச்சியாக ஒரே வேலையைச் செய்யும்.இவை பழமையான காலத்தில் கூட பயன்பட்டது.ஆனால் ஆட்டோமேசன்களால் அதன் இயக்கங்களை மாற்றவோ மற்றும் சுய அறிவுடன் செயல் படவோ முடியாது..
இன்றைய ரோபோட்கள் செயற்கை நுண்ணறிவு உடையது. எனினும் ஆட்டோமேசன்களை இன்று இய்ங்கும் ரோபோட்களின் முன்னோர் எனலாம்.
---------தொடரும்.
----------முத்து கார்த்திகேயன்.,மதுரை