Monday 26 June 2017

Ms-word டாக்குமண்ட்டுகளுக்கு பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாப்பது எப்படி?




முதலில் டாக்குமெண்டை உருவாக்க அல்லது ஓபன் செய்யவும். பின் file menu அல்லது ஆபிஸ் பட்டனை க்ளிக் செய்யவும்.
Save as என்பதை தேர்ந்தெடுக்கவும்.டயலாக் பாக்சில் டூல்ஸ் எங்கின்ற பட்டனை க்ளிக் செய்து General options என்பதை தேர்ந்தெடுக்கவும்.



Password to open என்பதில் பாஸ் வேர்டினை டைப் செய்யவும். password to modify என்பதில் ஒரு பாஸ்வேர்டினை டைப் செய்ய்வும். முதல் பாஸ் வேர்டு டாக்கு மெண்டினை பார்ப்பதற்கு, இரண்டாவது பாஸ் வேர்டு டாக்கு மெண்டினை ஃபார்மட் அல்லது எடிட் செய்வதற்காகும். Ok பட்டனை க்ளிக் செய்யும் போது மீண்டும் ஒரு முறை இரண்டு பாஸ் வேர்டுகளும் கேட்கப்படும்.முன்பு அளித்த இரண்டு பாஸ்வேர்டுகளை மீண்டும் அளிக்கவும். இது உங்கள் பாஸ் வேர்டினை உறுதி செய்து கொள்வதற்கு தான்.
இப்போதுடாக்கு மெண்டினை மூடிய பிறகு மீண்டும் திறக்கவும். முதல் பாஸ்வேர்டு கேட்கப்படும். அதை சரியாக அளித்தால் ஃபைல் ஓபன் ஆகும். இப்போது டாக்குமெண்டினில் இரண்டாவது பாஸ்வேர்டினை கொடுக்கமலேயே READ ONLY முறையில் ரீட் செய்யலாம். அல்லது இரண்டாவது பாஸ்வேர்டினை அளித்து ஃபைலை எடிட் செய்யலாம்.
                               -----முத்து கார்த்திகேயன்,மதுரை